நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி வெண்ணந்தூர் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் ரூ.100 கோடி ஜவுளி உற்பத்தி பாதிப்பு


நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி வெண்ணந்தூர் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்  ரூ.100 கோடி ஜவுளி உற்பத்தி பாதிப்பு
x
தினத்தந்தி 21 Nov 2021 2:35 AM IST (Updated: 21 Nov 2021 2:35 AM IST)
t-max-icont-min-icon

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி வெண்ணந்தூர் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் ரூ.100 கோடி ஜவுளி உற்பத்தி பாதிப்பு

வெண்ணந்தூர்:
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி வெண்ணந்தூர் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.100 கோடி ஜவுளி உற்பத்தி பாதிக்கப்படும நிைல ஏற்பட்டுள்ளது.
விலை உயர்வு
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் விசைத்தறி பிரதான தொழிலாக விளங்கி வருகிறது. இந்த பகுதியில் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளித்து வரும் விசைத்தறி நெசவு தொழில் தற்போது வரலாறு காணாத அளவிற்கு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. 
அதாவது 40 எண் கொண்ட 50 கிலோ சிப்பம் கடந்த செப்டம்பர் மாதம் ரூ.9 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது இது படிப்படியாக விலை உயர்ந்து ரூ.14 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 50 நாட்களில் மட்டும் நூல்களின் விலை ரூ.5 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. 
உற்பத்தி பாதிப்பு
இதுகுறித்து விசைத்தறி தொழிலாளர்கள் கூறியதாவது:- இந்த விலைக்கு நூல்கள் வாங்கி ஜவுளி உற்பத்தி செய்தால் அதிகளவில் நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது. இந்த தொழிலை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிைல காணப்படுகிறது. மேலும் வெண்ணந்தூர் பகுதியில் விசைத்தறி மற்றும் ஆட்டோ லூம் தறிகள் 5 ஆயிரத்துக்கு மேல் உள்ளது. இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 
தற்போது இந்த விலையேற்றத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் விசைத்தறி கூடங்களை இயக்காமல் வேலைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ரூ.100 கோடிக்கு மேல் ஜவுளி உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே நெசவாளர்களின் நலன்கருதி நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நூல் விலை ஏற்றத்தை கண்காணிக்க குழு ஒன்றை தமிழக அரசு ஏற்படுத்தி நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story