நாமக்கல் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு


நாமக்கல் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 21 Nov 2021 2:35 AM IST (Updated: 21 Nov 2021 2:35 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு

நாமக்கல்:
நாமக்கல் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
குடிநீர் வினியோகம்
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள பட்டதையன்குட்டை பகுதியை சேர்ந்தவர் துரைராஜ். இவருடைய மகன் அரவிந்த் (வயது 18). துரைராஜ் சரக்கு ஆட்டோவில் ஓட்டல், டீக்கடைகள் உள்ளிட்ட கடைகளுக்கு குடிநீர் வினியோகம் செய்து வருகிறார். இதற்கு அரவிந்தன் துணையாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நாமக்கல் அருகே உள்ள தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியில் ஆட்டோ மொபைல் கடை ஒன்றிற்கு மின்மோட்டாரை இயக்கி அரவிந்த் குடிநீர் வினியோகம் செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
வாலிபர் சாவு
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அரவிந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து நாமக்கல் நல்லிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story