நாமக்கல் மாவட்டம் முழுவதும் 740 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது


நாமக்கல் மாவட்டம் முழுவதும் 740 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 21 Nov 2021 2:35 AM IST (Updated: 21 Nov 2021 2:35 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டம் முழுவதும் 740 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 10-வது கட்டமாக 740 மையங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்  நடைபெற உள்ளதாக கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தடுப்பூசி முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 13,84,300 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை முதல் தவணை தடுப்பூசி 9,79,622 நபர்களுக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 4,83,976 நபர்களுக்கும் செலுத்தப்பட்டு உள்ளது.
இதுவரை நடந்த 9 மெகா தடுப்பூசி முகாம்களில் 4 லட்சத்து 207 பேர் தடுப்பூசி செலுத்தி பயன் பெற்றனர். இந்த நிலையில் 10-வது கட்டமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள 666 நிலையான முகாம்கள் மூலமாகவும், 74 நடமாடும் குழுக்கள் மூலமாகவும் ஆக மொத்தம் 740 முகாம்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை கொரோனா நோய் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
1 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு
இம்முகாம் பணிகளில் 210 மருத்துவர்கள், 430 செவிலியர்கள், 1600 அங்கன்வாடி பணியாளர்கள், 1400 தன்னார்வலர்கள், 415 பயிற்சி செவிலியர்கள் மற்றும் 265 பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் 1400 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதன்மூலம் சுமார் 1 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முழுமையாக பங்கேற்று இதுவரை ஒருதவணை தடுப்பூசி கூட போடாதவர்களும், முதலாம் தவணை போட்டு முடித்து இரண்டாம் தவணைக்காக நிலுவையில் உள்ளவர்களும் தவறாமல் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story