குமரியில் இன்று மெகா தடுப்பூசி முகாம்
தினத்தந்தி 21 Nov 2021 2:37 AM IST (Updated: 21 Nov 2021 2:37 AM IST)
Text Sizeகுமரியில் இன்று மெகா தடுப்பூசி முகாம்
நாகர்கோவில்,:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
குமரி மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மெகா தடுப்பூசி முகாம் மொத்தம் 555 இடங்களில் நடக்கிறது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் விதமாக இந்த முகாம் நடத்தப்படுகிறது. பொதுமக்களின் வசதிக்காக காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை முகாம் நடைபெறுகிறது. எனவே 18 வயதை தாண்டிய அனைவரும் முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire