சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் கோரி 38,786 மனுக்கள் வந்துள்ளன-ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரி தகவல்


சேலம்  மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் கோரி 38,786 மனுக்கள் வந்துள்ளன-ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 21 Nov 2021 2:56 AM IST (Updated: 21 Nov 2021 2:56 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் கோரி 38,786 மனுக்கள் வந்துள்ளதாக ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரி தெரிவித்தார்.

சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் குறித்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு சேலம் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், தமிழ்நாடு கைவினைப்பொருட்கள் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனருமான ஷோபனா தலைமை தாங்கினார். சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சேலம் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஷோபனா பேசும்போது, ‘சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில் இதுவரை நடந்த 3 முகாம்களில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தலுக்கு 21,900 மனுக்களும், நீக்கலுக்கு 7,092 மனுக்களும், திருத்தம் செய்வதற்கு 4,696 மனுக்களும், ஒரே தொகுதிக்குள் இடமாற்றம் செய்ய 3,098 மனுக்களும் என மொத்தம் 36,786 மனுக்கள் வந்துள்ளன. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 1,216 வாக்குச்சாவடி மையங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது’ என்றார்.
முன்னதாக சேலம் ஸ்ரீ சாரதா வித்யாலயா மகளிர் மேல்நிலைப்பள்ளி, குளூனி பெண்கள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மற்றும் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்களை மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஷோபனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Next Story