முப்ெபரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் பால் அபிஷேகம்


முப்ெபரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் பால் அபிஷேகம்
x
தினத்தந்தி 21 Nov 2021 3:34 AM IST (Updated: 21 Nov 2021 3:34 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடி முப்ெபரும் தேவியர் பவானி அம்மன் கோவிலில் பால் அபிஷேகம் நடந்தது.

வாசுதேவநல்லூர்:
புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் முப்பெரும் தேவியர் பவானியம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், பால நாகம்மன் கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் சிறப்பு பால் அபிஷேகம், திருவிளக்கு பூஜை நடந்தது. அப்போது பவுர்ணமி பூஜையின் சிறப்பு குறித்து கோவில் குருநாதர் சக்தியம்மா ஆன்மிக சொற்பொழிவாற்றினார். முப்பெரும் தேவி அம்மனுக்கு பச்சரிசி மாவு, பன்னீர், மஞ்சள் உள்பட 18 வகையான பொருட்களுடன் அபிஷேகங்களும், உலக நன்மைக்காகவும், மழைவேண்டியும் பிரார்த்தனைகளும் நடைபெற்றது. 1008 லிட்டர் சிறப்பு பால் அபிஷேகம் குருநாதர் சக்தியம்மா தலைமையில் நடந்தது. இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் சமூக இடைவெளியுடன் பெண்கள் கலந்து கொண்டனர்.



Next Story