ஆவடியில் அரசு பஸ் பணிமனை ஊழியர் கிணற்றில் விழுந்து சாவு


ஆவடியில் அரசு பஸ் பணிமனை ஊழியர் கிணற்றில் விழுந்து சாவு
x
தினத்தந்தி 21 Nov 2021 1:31 PM IST (Updated: 21 Nov 2021 1:31 PM IST)
t-max-icont-min-icon

ஆவடியில் அரசு பஸ் பணிமனை ஊழியர் கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆவடி,

ஆவடி வசந்தம் நகர், நேரு தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 54). இவர், ஆவடியில் உள்ள அரசு பஸ் பணிமனையில் டெக்னீசியனாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி பத்மாவதி. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ரவிச்சந்திரன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்து வந்தார். நேற்று அதிகாலை ரவிச்சந்திரன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் வீட்டுக்கு வரவில்லை. 

இதற்கிடையே, ஆவடி ராஜ்பாய் நகர், நேரு தெருவில் உள்ள தரைமட்ட கிணற்றில் ரவிச்சந்திரன் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவறிந்து வந்த ஆவடி தீயணைப்பு நிலைய வீரா்கள் கிணற்றில் கிடந்த ரவிச்சந்திரன் உடலை மீட்டனர். இதுகுறித்து, ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Next Story