மோட்டார் சைக்கிளில் சென்றபோது கீழே விழுந்தார்: மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி


மோட்டார் சைக்கிளில் சென்றபோது கீழே விழுந்தார்: மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 21 Nov 2021 1:35 PM IST (Updated: 21 Nov 2021 1:35 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிளில் சென்றபோது கீழே விழுந்த வாலிபர் மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார்.

சென்னை,

சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் ராஜேஷ் (வயது 19). இவர், தனியார் கலை கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துவந்தார். நேற்று மதியம் ராஜேஷ் தனது மோட்டார்சைக்கிளில் கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி ராஜேஷ் சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த அய்யப்பந்தாங்கல்-பிராட்வே செல்லும் மாநகர பஸ்(தடம் எண்: 26) அவர் மீது ஏறி இறங்கியது. பஸ் சக்கரத்தில் சிக்கிய ராஜேஷ், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story