மாங்காடு அருகே சினிமா படத்தொகுப்பு உதவியாளர் தற்கொலை
மாங்காடு அருகே சினிமா படத்தொகுப்பு உதவியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பூந்தமல்லி,
மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 23). வடபழனியில் உள்ள சினிமா கம்பெனியில் படத்தொகுப்பு உதவியாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி வர்ஷா. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வர்ஷா தனது கணவரிடம் கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் மன உளைச்சலில் இருந்து வந்த பாலாஜி நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு வீட்டின் மேல் அறைக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. அவரது பெற்றோர் சென்று பார்த்தபோது பாலாஜி தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாலாஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார்ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story