பெண் குழந்தைகளை யாரும் தொட்டு பேச அனுமதிக்க கூடாது, இதுவிசயத்தில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுறுத்தி உள்ளார்


பெண் குழந்தைகளை யாரும் தொட்டு பேச அனுமதிக்க கூடாது, இதுவிசயத்தில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுறுத்தி உள்ளார்
x
தினத்தந்தி 21 Nov 2021 5:25 PM IST (Updated: 21 Nov 2021 5:25 PM IST)
t-max-icont-min-icon

பெண் குழந்தைகளை யாரும் தொட்டு பேச அனுமதிக்க கூடாது, இதுவிசயத்தில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுறுத்தி உள்ளார்

ஸ்பிக்நகர்:
பெண் குழந்தைகளை யாரும் தொட்டு பேச அனுமதிக்க கூடாது, இதுவிசயத்தில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுறுத்தி உள்ளார்.
பாலியல் வன்முறை தடுப்புதினம்
தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்பு தினவிழா நடந்தது. தூத்துக்குடி மாவட்ட சைல்டு லைன் குழு உறுப்பினர் கவிதா பேபி வரவேற்புரையாற்றினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காசிராஜன், சைல்டு லைன் செயல்பாடு குறித்து விளக்கம் அளித்தார். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, முள்ளக்காடு பஞ்சாயத்து தலைவர் கோபிநாத் நிர்மல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காமராஜ் கல்லூரியின் குற்றவியல் துறையைச் சார்ந்த ஜான் மோசஸ் கிரிதரன் நவீன குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பேசியதாவது:-
குழந்தை திருமணம் கூடாது
குழந்தைகள் மீதான குற்றங்கள் நடக்காமல் தடுப்பதற்கு பெற்றோர்கள் பிள்ளைகளிடம் அதிக நேரம் செலவிட வேண்டும். தினசரி செய்திகளை பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக அவர்களை படிக்க வைக்க வேண்டும். குழந்தைகள் மீதான 90 சதவீத குற்றங்கள் உறவினர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்கள் மூலமாகவே நடைபெறுகிறது. 18 வயதிற்கு முன்னர் செய்யப்படுகிற காதல் திருமணங்கள் பெரும்பாலும் விவாகரத்தில் முடிகிறது. இதனால் குழந்தை திருமணத்தை பெற்றோர்கள் அனுமதிக்கக்கூடாது. 
தொட்டுபேச அனுமதிக்க கூடாது
மொபைல் போனில் வரும் தெரியாத நபர்களின் தொலைபேசிக்கு போட்டோ, போன் நம்பர் உள்ளிட்டவற்றை பகிரக் கூடாது. அப்படி பகிரும் பொழுது அதனை ஆபாச படமாக மாற்றி மிரட்டும் செயலில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. பாலியல் தொல்லைக்கு 3 வயது 2 வயது குழந்தைகள் ஆளாக்கப்படுகின்றனர். அதற்காக போக்சோ சட்டம் உருவாக்கப்பட்டது. இதில் ஒரு வருட தண்டனை முதல் தூக்கு தண்டனை வரை கொடுக்கும் வகையில் பிரிவுகள் உள்ளன. ஒரு பெண்ணையோ, குழந்தையைப் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது, சைகை செய்வது எல்லாம் குற்ற செயல் தான். பெண் குழந்தைகளை எங்கு தொட்டு பேசினாலும் அது தவறான செயல். அதனை குழந்தைகளும், பெற்றோர்களும் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. 
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் சைல்டு லைன் குழு உறுப்பினர் அனிதா முள்ளக்காடு பள்ளி மாணவிகள், தாய்மார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story