பாதை புதர் மண்டிக்கும் அவலம்


பாதை புதர் மண்டிக்கும் அவலம்
x
தினத்தந்தி 21 Nov 2021 6:29 PM IST (Updated: 21 Nov 2021 6:29 PM IST)
t-max-icont-min-icon

குமரலிங்கம் பகுதியில் அமராவதி ஆற்றுக்கு செல்லும் பாதை புதர்மண்டிக்கிடக்கிறது.

குமரலிங்கம்
குமரலிங்கம் பகுதியில் அமராவதி ஆற்றுக்கு செல்லும் பாதை புதர்மண்டிக்கிடக்கிறது. அந்த பாதையை சுத்தம் செய்ய வேண்டும் என்று  அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுள்ளனர்.
அமராவதி ஆற்றுக்கு செல்லும் பாதை
குமரலிங்கம் பகுதியில் அமராவதி ஆற்றுக்கு செல்லும் பாதை அகலமாக இருந்தது. ஒரே சமயத்தில் எதிரெதிராக இரண்டு கனரக வாகனங்கள் செல்லும் அளவிற்கு அகலமான பாதையாகும். சில வருடங்களுக்கு முன்பாக பேரூராட்சியின் சார்பாக எந்தவிதமான அளவீடும் செய்யாமல் சிமெண்டு பாதை அமைக்கப்பட்டது. இதனால் அந்தப் பாதை குறுகியபாதையாக மாறியது. சிமெண்டுபாதை போக மீதமிருந்த செம்மண் பாதையானது நாளடைவில் மண் அரிப்பினால் கரைந்து காணாமல் போனது.
தற்போது சிமெண்டு பாதையும் சேதமடைந்து மழையினால் அரிப்பும் ஏற்பட்டு மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. குண்டும் குழியுமாக பொதுமக்கள் உபயோகத்திற்கு மிகவும் கடினமாக உள்ளது. மேலும் ஆற்றுக்கு போகும் பகுதியில் இருபுறமும் புதர் மண்டி கிடைக்கிறது. ஆற்றின் படித்துறை இடிந்தும் சிதைந்தும் காணப்படுகிறது. மேலும் ஆற்றின் கரையில்  மது பிரியர்கள் திறந்தவெளி பாராக பயன்படுத்துவதால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆற்றுக்குச் செல்வது ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஆற்றுக்கு செல்லும் பாதையின் இருபுறமும் சுகாதார சீ்ர்கேட்டை ஏற்படுத்துவதால் மேலும் பாதையின் அளவு குறைந்து ஒத்தையடிப் பாதையாக மாறியுள்ளது. 
புதர்களை அகற்ற வேண்டும்
ஆகையால் குமரலிங்கம் பேரூராட்சி நிர்வாகம் ஆற்றுக்கு செல்லும் பாதையை மறுஅளவீடு செய்து இரண்டு புறமும் தடுப்பு சுவர் அமைத்து விரிவாக்கம் செய்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். குமரலிங்கம் பேரூராட்சி நிர்வாகம் இருபுறமும் உள்ள புதர்களை அப்புறப்படுத்தி பாதையை விரிவாக்கம் செய்து ஆற்றின் படித்துறையை செப்பனிட வேண்டும் என்பது அந்த  பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story