தூத்துக்குடியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டு உள்ளது
தூத்துக்குடியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டு உள்ளது
தூத்துக்குடி:
தூத்துக்குடி நகரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட மாநாடு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 10-வது மாவட்ட மாநாடு தூத்துக்குடியிலுள்ள தனியார் மண்டபத்தில் 2 நாட்களாக நடந்தது. நேற்று நடந்த 2-வது நாள் மாநாட்டிற்கு தலைமைக் குழுவை சேர்ந்த ஆறுமுகம், பூமயில், ஜாய்சன் ஆகியோர் தலைமை தாங்கினர். அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேச்சிமுத்து வாசித்தார். வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன் சமர்ப்பித்தார். முன்னதாக மாநகர செயலாளர் ராஜா வரவேற்று பேசினார்.
புதிய மாவட்ட செயலாளர்
மாநாட்டில் 35 பேர் கொண்ட புதிய மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. புதிய மாவட்ட செயலாளராக கே.பி.ஆறுமுகம் தேர்வு செய்யப்பட்டார். சிறப்பு அழைப்பாளராக மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி கலந்து கொண்டு மாநாட்டின் நிறைவுரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் முத்து நன்றி கூறினார்.
கூட்டத்தில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். அங்கு விபத்தின் வீரியம் குறித்து அறிய உதவும் ஸ்கேன் வசதி செய்து தரவேண்டும். தூத்துக்குடியிலிருந்து விளாத்திகுளம், அருப்புக்கோட்டை வழியாக மதுரை வரையிலான ரெயில்வே திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
செய்துங்கநல்லூர், தெய்வச்செயல்புரம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி தொடங்க வேண்டும்.
புதிய அரசு கல்லூரி
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் வசித்து வரும் காட்டுநாயக்கன் சமுதாய மக்களுக்கு பழங்குடி மக்களுக்கான ஜாதி சான்று வழங்க வேண்டும். ஓட்டப்பிடாரம் பகுதியில் நீதிமன்றமும், தூத்துக்குடி நகரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் தொடங்க வேண்டும். உப்பள தொழிலாளர்களுக்கு பணியிட பாதுகாப்பு மற்றும் மழைக்கால நிவாரணம் வழங்கிட வேண்டும். எட்டயபுரம் அரசு மருத்துவமனையை 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story