17 வயது சிறுமி பலாத்காரம்; வாலிபர் மீது போக்சோவில் வழக்கு


17 வயது சிறுமி பலாத்காரம்; வாலிபர் மீது போக்சோவில் வழக்கு
x
தினத்தந்தி 21 Nov 2021 7:11 PM IST (Updated: 21 Nov 2021 7:11 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஊட்டி

ஊட்டியில் 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சிறுமி கர்ப்பம்

நீலகிரி மாவட்டம் கட்டபெட்டு அருகே உள்ள பெட்டமந்து கிராமத்தை சேர்ந்தவர் நித்தேஷ்(வயது 22). இவருக்கும், ஊட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமானது. 

மேலும் அந்த சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவள் கர்ப்பம் அடைந்தாள். இது வெளியே தெரியவந்ததும் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் நிச்சயம் செய்தனர்.

போக்சோவில் வழக்கு

இந்த நிலையில் அந்த சிறுமி பிரசவத்துக்காக ஊட்டியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் 18 வயது பூர்த்தியடையாததால் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு அந்த ஆஸ்பத்திரி நிர்வாகம் தகவல் தெரிவித்தது. அதன்பேரில் சேவை மைய குழுவினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் நித்தேஷ் மீது குழந்தை திருமண சட்டம், போக்சோ சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

திடீர் நெஞ்சுவலி

இதற்கிடையில் திடீரென நித்தேசுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. தொடர்ந்து அவர் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்ததும் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்க உள்ளனர்.


Next Story