தூத்துக்குடியில் பல் டாக்டரை கடத்தி தாக்கி வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்


தூத்துக்குடியில் பல் டாக்டரை கடத்தி தாக்கி வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்
x
தினத்தந்தி 21 Nov 2021 7:49 PM IST (Updated: 21 Nov 2021 7:49 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பல் டாக்டரை கடத்தி தாக்கி வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடி:
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை சேர்ந்தவர் பத்மநாபன் இவருடைய மகன் முருகப்பெருமாள். இவர் தூக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி பல் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவரை கடந்த 18-ஆம் தேதி மதியம் ஆஸ்பத்திரியில் இருந்து பணி முடிந்து வெளியில் வரும்போது ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவரான முப்பிலிவெட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்த அம்மாசி மகன் இளையராஜா (வயது35) உள்பட சிலர் சேர்ந்து காரில் கடத்தி சென்று ஓட்டப்பிடாரம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் அடைத்துவைத்து தாக்கியுள்ளனர். பின்னர் முருகப்பெருமானை மீண்டும் ஆஸ்பத்திரியில் இறக்கிவிட்டு மிரட்டி சென்றுள்ளனர். காயமடைந்த முருகப்பெருமாள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து முருகப்பெருமாள் அளித்த புகாரின்பேரில் தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை நேற்று முன்தினம் கைது செய்தார். மேலும் கடத்துவதற்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய  ஓட்டப்பிடாரம் வடக்கு பரும்பூரைச் சேர்ந்த பரமசிவன் மகன் வானவராயன் (எ) சண்முகசுந்தரம் (44) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story