திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 1200 இடங்களில் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்


திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 1200 இடங்களில் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 21 Nov 2021 8:22 PM IST (Updated: 21 Nov 2021 8:22 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 1200 இடங்களில் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் நடந்தது.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்காக அனைத்து தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் பொதுமக்களுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே 18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு சிறப்பு முகாம்களை நடத்தும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி திண்டுக்கல், பழனி, கொடைக்கானல் உள்பட மாவட்டம் முழுவதும் 1,200 இடங்களில் நேற்று சிறப்பு வாக்காளர் சேர்க்கை முகாம் நடந்தது. இந்த முகாம்களில் நேற்று காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்ப்பதற்காக விண்ணப்பித்தனர். மாவட்டம் முழுவதும் நேற்று நடந்த முகாமில் 3 ஆயிரத்து 718 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பித்துள்ளனர்.

Next Story