மீனவர்கள் கடலில் பிடித்து வரும் மீன்களை சேமிக்க கிட்டங்கி கட்டுவதற்கு உதவி வழங்கப்பட உள்ளதாக, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்
மீனவர்கள் கடலில் பிடித்து வரும் மீன்களை சேமிக்க கிட்டங்கி கட்டுவதற்கு உதவி வழங்கப்பட உள்ளதாக, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்
ஆறுமுகநேரி:
மீனவர்கள் கடலில் பிடித்து வரும் மீன்களை சேமிக்க கிட்டங்கி கட்டுவதற்கு உதவி வழங்கப்பட உள்ளதாக, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மீனவர் தினவிழா
தமிழ்நாடு மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் உலக மீனவர் தின விழா புன்னக்காயலில் நடைபெற்றது. விழாவிற்கு தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தூத்துக்குடி மாவட்ட உதவி இயக்குனர் விஜயராகவன் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், எம்.எல்.ஏ.க்கள் ஊர்வசி அமிர்தராஜ், சண்முகையா, மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல சேவியர் ஆகியோர் பேசினர்.
விழாவில், மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மீனவர் தினவிழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவியரின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் புன்னக்காயல் கிராம பஞ்சாயத்து தலைவி சோபியா, திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோகிலா, திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஸ்சிங், மீன்வளத்துறை உதவி இயக்குனர் வையலா, மேலஆத்தூர் கிராம பஞ்சாயத்து தலைவர் சதீஷ்குமார், ஆத்தூர் தி.மு.க. நகர செயலாளர் ஆறுமுகப்பெருமாள், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் செல்வகுமார், மாவட்ட தி.மு.க.இளைஞரணி செயலாளர் ராமஜெயம், மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவர் அருணாசலம், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜனகர், மாநில தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் உமசங்கர், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் துறைமுகம பிளாரன்ஸ், தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. மீனவரணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரொட்ரிகோ, ஆழ்வார்திருநகரி ஒன்றிய பொறுப்பாளர் நவீன்குமார், தூத்துக்குடி விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவர் சேவியர் வாஸ், ஆத்தூர் பொறுப்பாளர் முருகப்பெருமாள், ஸ்ரீவைகுண்டம் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் ரமேஷ் திருச்செந்தூர், மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் என் அமிர்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மீன்சேமிப்பு கிட்டங்கி
விழாவில் அமைச்சர் பேசுகையில், மீனவர்களுக்கு கடலில் ஏற்படும் இடர்பாடுகளை கரையில் இருப்பவர்கள் அறிந்து உதவி செய்வதற்கான தகவல் சாதனங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலில் பிடித்து வரும் மீன்களை சேமித்து வைப்பதற்கான சேமிப்பு கிட்டங்கி கட்ட உதவி வழங்கப்பட உள்ளது. மேலும் 2ஆயிரம் படகுக்கான வெளிப்புற எஞ்சின் களும் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புன்னக்காயல் தெருக்கல் பேவர் பிளாக் சாலையாக மாற்றி தரப்படும். இவ்வாறு அவர் பேசினார். புன்னைக்காயல் ஊர் கமிட்டி தலைவர் அமல்ஸன் பீரிஸ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story