பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு


பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு
x
தினத்தந்தி 21 Nov 2021 10:30 PM IST (Updated: 21 Nov 2021 10:30 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே திருப்பாலபந்தல் போலீஸ் நிலையம் சார்பில் பூமாரி, அருதங்குடி, துறிஞ்சிப்பட்டு, நரியந்தல், தகடி ஆகிய கிராமங்களில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு, மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் போலீசார் கலந்து கொண்டு, குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், மழைக்காலங்களில் பொதுமக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது பற்றியும், குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் விளக்கி கூறி அங்குள்ள பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் போலீஸ் ஏட்டுகள் கோகிலா, அஞ்சலை மற்றும் அமலா உள்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

Next Story