நீடாமங்கலத்தில் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு


நீடாமங்கலத்தில் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 21 Nov 2021 10:32 PM IST (Updated: 21 Nov 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

சரக்கு ரெயில் பெட்டிகளை பிரித்து நிறுத்தும் பணிக்காக நீடாமங்கலத்தில் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

நீடாமங்கலம்:
சரக்கு ரெயில் பெட்டிகளை பிரித்து நிறுத்தும் பணிக்காக நீடாமங்கலத்தில் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். 
ரெயில்வே கேட் மூடப்பட்டது
நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு நேற்று காலை காலிப்பெட்டிகளுடன் சரக்கு ெரயில் வந்தது. இதற்காக காலை 9.05 மணியளவில் ெரயில்வேகேட் மூடப்பட்டது. அப்போது சரக்கு ெரயில் பெட்டிகள் பிரித்து நிறுத்தும் பணி தொடங்கியது. அதனை தொடர்ந்து காரைக்கால் செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ெரயில் வந்து பயணிகள் இறங்கியவுடன் புறப்பட்டு சென்றது. சரக்கு ெரயில் பெட்டிகள் பிரித்து நிறுத்தும் பணி முடிவடைந்தவுடன் மீண்டும் ெரயில்வே கேட் திறக்கப்பட்டது. 
போக்குவரத்து பாதிப்பு 
இதையடுத்து பஸ் உள்ளிட்ட நெடுஞ்சாலை வாகனங்கள் புறப்பட்டு சென்றது. ெரயில்வே கேட் மூடப்பட்டதால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து 1 மணிநேரத்திற்கு பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் ரெயில்வே கேட்டை கடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இந்தநிலையை போக்கி மாற்று வழித்திட்டங்களை துரிதமாக நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story