புவனகிரி அருகே வேளாண் அலுவலகத்தில் தீ விபத்து ஆவணங்கள் எரிந்து போனதால் விவசாயிகள் அதிர்ச்சி
புவனகிரி அருகே வேளாண் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆவணங்கள் எரிந்து போனதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
புவனகிரி,
புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு கிராமத்தில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் அமைந்துள்ளது. இங்குள்ள அறையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் அங்குள்ள அறையில் பீரோவில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள், ஹார்ட்டிஸ்க் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சேதமானது.
ஆவணங்கள் சேதம்
இதில் வட்டார மையத்திற்கு உட்பட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் விண்ணப்பித்த உரமானிய விண்ணப்பம், பயிர் காப்பீடு விண்ணப்பம், மற்றும் பல்வேறு கோரிக்கைகள், மானியம் விவரங்கள்
அடங்கிய விண்ணப்பங்கள் போன்ற முக்கிய ஆவணங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இவை அனைத்தும் எரிந்து சேதமானதால் அந்த பகுதி விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும், தீ விபத்துக்கு மின்கசிவு காரணம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் தீ விபத்துக்கான காரணம் குறித்து புவனகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story