கோவில் காவலாளிக்கு கொலை மிரட்டல்


கோவில் காவலாளிக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 21 Nov 2021 10:45 PM IST (Updated: 21 Nov 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

வீரபாண்டியில் கோவில் காவலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி : 

வீரபாண்டி அருகே உள்ள கோட்டூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் செல்லப்பா (வயது 54). இவர் வீரபாண்டியில் உள்ள கன்னீஸ்வரமுடையார் கோவிலில் இரவுநேர காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி இரவு கோவிலில் செல்லப்பா பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த பழனிசெட்டிபட்டியை சேர்ந்த சண்முகம், வசந்த், சுந்தர் ஆகிய 3 பேரும் கதவை திறக்க சொல்லி தகராறு செய்தனர். 

மேலும் தகாத வார்த்தையால் பேசி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வீரபாண்டி போலீசில் செல்லப்பா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வசந்த், சுந்தர் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story