தடுப்பணையில் குளிக்கச்சென்ற தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலி


தடுப்பணையில் குளிக்கச்சென்ற தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலி
x
தினத்தந்தி 21 Nov 2021 11:11 PM IST (Updated: 21 Nov 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

குளிக்கச்சென்ற தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலி

குடியாத்தம்

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை அடுத்த பூங்குளம் மீனூரானாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (வயது 40), தொழிலாளி..
பூங்குளம் மலையில் இருந்து வரும் கானாற்றில் கழுதை கானா என்ற பகுதியில் சிறிய அளவிலான தடுப்பணை உள்ளது. நேற்று மாலையில் அந்த தடுப்பணையில் ராஜீவ் காந்தி குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தடுப்பணையில் மூழ்கியுள்ளார். உடனே குளித்துக்கொண்டிருந்த சிலர் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து பார்த்த போது இறந்து போனது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ராஜீவ்காந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இந்த சம்பவம் தொடர்பாக தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story