கே.வி.குப்பத்தில் மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. உள்பட 66 பேர் கைது
மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. உள்பட 66 பேர் கைது
கே.வி.குப்பம்
கே.வி.குப்பம் பஸ்நிலையம் அருகே காட்பாடி சாலையில் அ.தி.மு.க.வினர் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கே.வி.குப்பத்தை அடுத்த காமராஜபுரம் - விரிஞ்சிபுரம் இடையே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலாற்று தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும். பட்டா நிலத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். உரிய நிவாரணம் முறையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த சாலை மறியல் நடைபெற்றது.
தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் மேகநாதன், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.லோகநாதன், மேற்கு ஒன்றிய செயலாளர் கே.எம்.ஐ.சீனிவாசன் உள்ளிட்ட 66 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story