ரெத்தினம்பிள்ளை புதூர் தெற்கு காலனியில் சேறும் சகதியுமாக மாறிய சாலை
ரெத்தினம்பிள்ளை புதூர் தெற்கு காலனியில் சேறும் சகதியுமாக மாறிய சாலை குறிதது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளித்தலை
கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியம் திம்மம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது ரெத்தினம்பிள்ளைபுதூர். இந்த ஊரிலுள்ள தெற்கு காலனி பகுதிக்கு செல்லும் சாலை மண் சாலையாக உள்ளது. தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக இந்த மண் சாலை பல நாட்களாக மிகவும் சேறும் சகதியுமாக உள்ளது.
இதனால் இச்சாலை வழியாக பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் உள்பட அனைவரும் நடந்து கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது. இந்த சாலை வழியாக மோட்டார் சைக்கிள்களில் செல்லும்போது சேற்றில் வாகனங்களின் சக்கரங்கள் சிக்கி கொள்கின்றன. பலர் இந்த சாலையில் நடந்து செல்லும்போது வழுக்கி சேற்றில் விழுந்துள்ளனர். தங்கள் வீட்டிற்கு தேவையான குடிநீரை பிடிக்கக் கூட செல்லமுடியாத காரணத்தினால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருவதாக கூறுகின்றனர். எனவே உடனடியாக சேறும் சகதியுமாக உள்ள இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story