தரைப்பாலத்தில் கார் மோதி 2 பேர் பலி


தரைப்பாலத்தில் கார் மோதி 2 பேர் பலி
x
தினத்தந்தி 21 Nov 2021 11:36 PM IST (Updated: 21 Nov 2021 11:36 PM IST)
t-max-icont-min-icon

தரைப்பாலத்தில் கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர்.

மானாமதுரை,
மானாமதுரை அருகே தரைப்பாலத்தில் கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

தாயமங்கலம் கோவில்

கோயம்புத்தூர் அருகே சேரன்மாநகரை சேர்ந்தவர் அய்யப்பன்.  இவரது மனைவி தேவி, மகள்கள் காளீஸ்வரி, ஆர்த்தி. அய்யப்பன் கோவையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர்களது உறவினர்கள் டிரைவர் உதயகுமார், ஹரிவேல், கார்த்தி, பாண்டி, திருமலை, திருஞானம். 
ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்கள் நேற்றுமுன்தினம் இரவு கோயம்புத்தூரில் இருந்து காரில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தாயமங்கலம் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தனர்.  
நேற்று அதிகாலை மானாமதுரை-தாயமங்கலம் சாலையில் கார் வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து உருண்டு தரைப்பால தடுப்புசுவரில் மோதி நின்றது.  இதில் காரில் வந்த பாண்டி (வயது 45), காளிஸ்வரி(15) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். காரில் வந்த அய்யப்பன், தேவி, திருஞானம், திருமலை, ஹரிவேல் முருகன், ஆர்த்தி, உதயகுமார் ஆகிய 8 பேர் படுகாயம் அடைந்தனர். 
உடனே அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றனர். 
வழக்குப்பதிவு
இதுகுறித்து தகவல் அறிந்த மானாமதுரை போலீசார் விரைந்து வந்து பலியானார்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  அதிகாலையில் கோவிலுக்கு சென்றவர்கள்  பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story