எலக்ட்ரீசியன் தற்கொலை


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 21 Nov 2021 11:42 PM IST (Updated: 21 Nov 2021 11:42 PM IST)
t-max-icont-min-icon

எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்
கரூர் தாந்தோணிமலை பகுதிக்குட்பட்ட காந்தி நகரை சேர்ந்தவர் முரளிராஜ் (வயது 51). எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணமாகி மகேஸ்வரி என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்தநிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட முரளிராஜ் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, முரளிராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story