சுவர் இடிந்து மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் பலி


சுவர் இடிந்து மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் பலி
x

சுவர் இடிந்து மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் பலியானார்.

கீழப்பழுவூர், 
அரியலூர் மாவட்டம் கண்டராதித்தம் மேட்டு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 55). இவர் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நல சங்க மாவட்ட தலைவராக உள்ளார். அவரது வீட்டருகே சிமெண்டு ரோட்டில் நெல் காய போட்டிருந்தார். அப்போது திடீரென மழை பெய்ததால் காய வைத்த நெல்லை அள்ளி கொண்டிருக்கும்போது அருகில் இருந்த மகாலிங்கம் என்பவரின் வீட்டின் செங்கல் சுவரானது திடீரென இடிந்து சுப்பிரமணியன் மீது விழுந்தது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story