கொரோனா தடுப்பூசி முகாம்
கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
அன்னவாசல்:
அன்னவாசல் பகுதியில் உள்ள ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நேற்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள், ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டனர். இதேபோல் அன்னவாசல், இலுப்பூர் பேரூராட்சி பகுதிகளில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. இம்முகாம்களில் மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர், பேரூராட்சிதுறையினர், ஊராட்சி துறையினர், வருவாய்துறையினர், பள்ளி கல்விதுறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் இடையாத்தூர், கொன்னையம்பட்டி, நல்லூர், மேலத்தானியம், அரசமலை, எம். உசிலம்பட்டி, காரையூர் உள்பட பொன்னமராவதி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் 34 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அர்ஜுன்குமார், பொன்னமராவதி தாசில்தார் ஜெயபாரதி, காரையூர் மருத்துவ அலுவலர் அருமணிநாகராஜன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பொன்னமராவதி ஒன்றிய பகுதியிலான மேலைச்சிவபுரி, தொட்டியம்பட்டி, வேகுப்பட்டி, கொப்பனாபட்டி, அம்மன்குறிச்சி, மேலத்தானியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் மருத்துவர்கள் சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டு தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தினர். முகாம் நடைபெறும் மையங்களை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி, பொன்னமராவதி வட்டாட்சியர் ஜெயபாரதி, மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அர்ஜுன் குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story