கிராம நிர்வாக அதிகாரியை மிரட்டியவர் கைது


கிராம நிர்வாக அதிகாரியை மிரட்டியவர் கைது
x
தினத்தந்தி 22 Nov 2021 12:03 AM IST (Updated: 22 Nov 2021 12:03 AM IST)
t-max-icont-min-icon

கிராம நிர்வாக அதிகாரியை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

பாடாலூர், 
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிபவர் நாராயணசாமி. உதவியாளராக பணிபுரிந்து வருபவர் மகாலட்சுமி. இவர்கள் 2 பேரும் நாரணமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட விஜயகோபலபுரம் கிராமத்தில் கல்ஒட்டர் தெருவில் தகவலை சேகரிக்க சென்றனர். அப்போது வார்டு உறுப்பினராக இருக்கும் சாந்தியின் கணவர் மாரியப்பன் குறுக்கிட்டு தகவலை பெற விடாமல் தடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story