மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி


மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 22 Nov 2021 12:05 AM IST (Updated: 22 Nov 2021 12:05 AM IST)
t-max-icont-min-icon

மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.

அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே குன்னக்குரும்பியை சேர்ந்தவர் ராஜா (வயது 26). தொழிலாளி. நேற்றுமுன்தினம் அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டை சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 
அப்போது சாலையில் படுத்திருந்த மாடு மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை ஒதுக்கிய போது, நிலை தடுமாறி சாலையின் ஓரத்தில் நின்ற மரத்தில் மோதியது. இதில் படுகாயமடைந்த ராஜா சம்பவ இடத்திேலயே பரிதாபமாக பலியானார். இதையறிந்த அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அறந்தாங்கி நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து சாலைகளிலும் இரவு நேரத்தில் சாலையில் மாடுகள் தூங்குவதால் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. மாடுகளை பிடித்து கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story