நந்தியாற்றின் குறுக்ேக தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் பிணத்தை எடுத்துச்செல்ல அவதி
தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் பிணத்தை எடுத்துச்செல்ல அவதி
சோளிங்கர்
சோளிங்கர் பேரூராட்சிக்கு உட்பட்ட எசையனூர் பகுதியைச் சேர்ந்த ஏசுபாதம் (வயது 55) என்பவர் உடல்நலக் குறைவால் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரின் உடலை எசையனூருக்கு கொண்டு வரும் வழியில் நந்தியாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் மாற்றுப்பாதை இல்லை. உடலை எடுத்துச் செல்ல முடியாமல் தவித்த உறவினர்கள் கிராமம் அருகில் உள்ள கட்டி முடிக்கப்படாத நகரி-திண்டிவனம் ெரயில்வே மேம்பாலத்தின் வழியாக ஆபத்தான நிலையில் உடலை சிரமப்பட்டு எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.
நந்தியாற்றில் மழை வெள்ளம் வரும் போதெல்லாம் அப்பகுதி மக்கள் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். தரைப்பாலம் அருகில் மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும், எனக் கிராம மக்கள் 40 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் கட்ட அளவீடு பணிகள் நடந்தது. ஆனால் இன்னும் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. மேம்பாலம் அமைத்துத் தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், எனப் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story