மானூர் கிருதுமால் நதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
மானூர் கிருதுமால் நதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டி,
மானூர் கிருதுமால் நதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
தண்ணீர் திறப்பு
நரிக்குடி அருகே மானூர் பகுதியில் செல்லும் கிருதுமால் நதியில் பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். கிருதுமால் நதி ஓரங்களில் மானூர் பகுதியை சேர்ந்தவர்கள் கரிமூட்டம் போட்டும் அந்தப் பகுதியில் விவசாயமும் செய்து வருகின்றனர்.
இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் வைகை அணை நீர்மட்டம் உயர்ந்து வைகையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தற்போது கிருதுமால் நதியில் திறந்துள்ளனர்.
ஆக்கிரமிப்பு
கிருதுமால் நதியில் திறந்த தண்ணீர் மானூர் பகுதியில் இன்னும் 2 நாட்களில் வந்தடையும் சூழ்நிலை உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் செல்ல பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மானூர் ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருதுமால் நதியில் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுத்தால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது என விவசாயிகள் கூறுகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் விரும்புகின்றனர்.
Related Tags :
Next Story