அரியலூர் மாவட்டத்தில் அரசு வக்கீல்கள் நியமனம்
அரியலூர் மாவட்டத்தில் அரசு வக்கீல்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களுக்கு அரசு வக்கீல்களாக கீழ்கண்ட வக்கீல்களை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி சின்னத்தம்பி, அரசு தலைமை குற்றவியல் வக்கீல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம். டி.எ.கதிரவன், அரசு வக்கீல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம். சசிகுமார் சிறப்பு குற்றவியல் அரசு வக்கீல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம். கதிரவன் சிறப்பு அரசு வக்கீல் (மனித உரிமை)- மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம். முத்தமிழ்செல்வன் கூடுதல் அரசு வக்கீல் கூடுதல் அமர்வு நீதிமன்றம். ராஜா சிறப்பு அரசு வக்கீல் விரைவு மகளிர் நீதிமன்றம். பாலமுருகன் கூடுதல் அரசு வக்கீல் முதன்மை சார்பு நீதிமன்றம். மகேந்திரன் கூடுதல் அரசு வக்கீல் கூடுதல் சார்பு நீதிமன்றம். தேவேந்திரன் அரசு வக்கீல் மாவட்ட உரிமையை உரிமையியல் நீதிமன்றம். கணேசன் அரசு வக்கீல் சார்பு நீதிமன்றம். மணிமாறன் கூடுதல் அரசு வக்கீல் சார்பு நீதிமன்றம் ஜெயங்கொண்டம். கருணாநிதி அரசு வக்கீல் உரிமையியல் நீதிமன்றம் ஜெயங்கொண்டம். மோகன்ராஜ் கூடுதல் அரசு வக்கீல் சிறப்பு சார்பு நீதிமன்றம் 1, ஜெயங்கொண்டம். செந்தில்குமார் கூடுதல் அரசு வக்கீல் சிறப்பு சார்பு நீதிமன்றம் 2, ஜெயங்கொண்டம். இவர்கள் அனைவரும் தங்களது பொறுப்புகளை நீதிமன்ற வளாகத்தில் ஏற்றுக்கொண்டனர்.
Related Tags :
Next Story