உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களை கைப்பற்றும்- தேர்தல் பொறுப்பாளர் சசிகலா புஷ்பா பேட்டி


உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களை கைப்பற்றும்- தேர்தல் பொறுப்பாளர் சசிகலா புஷ்பா பேட்டி
x
தினத்தந்தி 22 Nov 2021 12:31 AM IST (Updated: 22 Nov 2021 12:31 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களை கைப்பற்றும் என மாநில தேர்தல் பொறுப்பாளர் சசிகலா புஷ்பா தெரிவித்தார்.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கு பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நெல்லை மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில தேர்தல் பொறுப்பாளர் சசிகலா புஷ்பா கலந்து கொண்டு விருப்ப மனுக்களை வாங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளையும் பாரதீய ஜனதா கட்சியின் வசம் கொண்டுவர இருக்கிறோம். அதற்கு சான்று அளிக்கும் வகையில் ஏராளமானோர் போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளனர். பா.ஜனதா தமிழகத்திலேயே 2-வது பெரிய கட்சியாக இருக்கிறது. பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ஊழலை தட்டிக் கேட்கிறார். தமிழகத்தை பொறுத்தவரை ஒரு வெற்றிடம் உள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்பக்கூடிய ஒரே நபர் அண்ணாமலை மட்டும் தான். விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் பாரதீய ஜனதா கட்சிக்கு வெற்றி கிடைக்கும். இந்த தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட தலைவர் மகாராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story