வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்- 1,483 வாக்குச்சாவடிகளில் நடந்தது
நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நேற்று 1,483 வாக்குச்சாவடிகளில் நடந்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாம் மொத்தம் 1,483 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது.
சிறப்பு முகாம்
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து, விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த 13, 14 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் முகாம்கள் நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று முன்தினமும், நேற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.
நெல்லை சந்திப்பு, தச்சநல்லூர், டவுன், மேலப்பாளையம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்குதல் மற்றும் திருத்தம் சிறப்பு முகாம் நடைபெற்றது.
1,483 வாக்குச்சாவடிகள்
இந்த முகாம் மாவட்டத்தில் மொத்தம் 1,483 வாக்குச்சாவடிகளில் நடந்தது. இதில் இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்தனர்.
வருகிற 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி அன்று 18 வயது பூர்த்தி அடைவோரும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் வருகிற 27, 28-ந் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story