லாரியில் கடத்த முயன்ற 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது


லாரியில் கடத்த முயன்ற 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 22 Nov 2021 12:57 AM IST (Updated: 22 Nov 2021 12:57 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளை அருகே லாரியில் 6 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கூடுதாழை விலக்கில் உவரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் மீன்பெட்டிகளுக்கு அடியில், 120 சாக்கு மூட்டைகளில் சுமார் 6 டன் ரேஷன் அரிசியை மறைத்து கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. அந்த மூட்டைகள் ஒவ்வொன்றும் 50 கிலோ எடை கொண்டதாக இருந்தது.
இதுதொடர்பாக லாரியில் இருந்த கன்னியாகுமரி மாவட்டம் பரக்குன்றுமாவிளைவீடு பகுதியைச் சேர்ந்த அஜீ (வயது 41), பந்தல்மூடு பகுதியைச் சேர்ந்த ரவிந்திரன் (47) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கூடுதாழை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி கேரளாவுக்கு கடத்தி செல்ல இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரேஷன் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.

Next Story