நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டல புதிய பிஷப் பர்னபாஸ் பதவியேற்பு


நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டல புதிய பிஷப் பர்னபாஸ் பதவியேற்பு
x
தினத்தந்தி 22 Nov 2021 1:09 AM IST (Updated: 22 Nov 2021 1:09 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டல புதிய பிஷப் ஆக பர்னபாஸ் பதவியேற்றார்.

நெல்லை:
நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டல புதிய பிஷப் ஆக ஏ.ஆர்.ஜி.எஸ்.டி.பர்னபாஸ் பதவியேற்றார்.

புதிய பிஷப் பர்னபாஸ்

நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தின் பிஷப் பெயர் பட்டியல் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ஜி.எஸ்.டி.பர்னபாஸ் உள்பட 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து தென்னிந்திய திருச்சபையின் பிரதம பேராயர் தர்மராஜ் ரசாலம் தலைமையில் தேர்வு குழு கூட்டம் நடந்தது.
இதில் ஏ.ஆர்.ஜி.எஸ்.டி.பர்னபாஸ் ஒரு மனதாக புதிய பிஷப் ஆக தேர்வு செய்யப்பட்டார்.

அருட்பொழிவு

இதையடுத்து நெல்லை திருமண்டலத்தின் 16-வது பிஷப் ஆக பர்னபாஸ் பதவியேற்பு நிகழ்ச்சி பாளையங்கோட்டை கதீட்ரல் பேராலயத்தில் நேற்று நடைபெற்றது. தென்னிந்திய திருச்சபையின் பிரதம பேராயர் தர்மராஜ் ரசாலம் தலைமை தாங்கி, புதிய பிஷப் பர்னபாசுக்கு அருட்பொழிவு வழங்கினார்.
மேலும் திருச்சி- தஞ்சை பிஷப்பும், நெல்லை திருமண்டல பொறுப்பு பிஷப்பாக இருந்த சந்திரசேகரன் மற்றும் பிஷப்கள் தேவசகாயம் (தூத்துக்குடி), செல்லையா (கன்னியாகுமரி), ஜோசப் (மதுரை), ஜார்ஜ் ஸ்டீபன் (சென்னை), தீமோத்தேயு ரவீந்திரன் (கோவை) உள்பட தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்ந்த பிஷப்புகள் அருட்பொழிவு வழங்கினர்.

வரவேற்பு விழா

இதைத்தொடர்ந்து மாலையில் சாராள் தக்கர் மகளிர் கல்லூரி கலையரங்கில் புதிய பிஷப்புக்கு வரவேற்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டல லே செயலர் ஜெயசிங், ஞானதிரவியம் எம்.பி., குருத்துவ செயலாளர் பாஸ்கர் கனகராஜ், பொருளாளர் மனோகர், துணை தலைவர் சுவாமிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் பிஷப் ஜே.ஜே.கிறிஸ்துதாஸ், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், மேல்நிலைப்பள்ளிகளின் மேலாளர் புஷ்பராஜ், தொடக்கப்பள்ளிகளின் மேலாளர் இஸ்ரவேல், செயற்குழு உறுப்பினர்கள் சாலமோன் டேவிட், பவுல்நேசன், ஜான்ஸ் கல்லூரி தாளாளர் கே.பி.கே.செல்வராஜ், சாராள் தக்கர் கல்லூரி தாளாளர் சவுந்தரபாண்டியன், முதல்வர் உஷா காட்வின், மேரி சார்ஜென்ட் பள்ளி தாளாளர் ஆல்பிரட், ஜான்ஸ் கல்லூரி முதல்வர் கென்னடி, கதீட்ரல் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சாலமன் டேவிட், நல்லூர் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி தாளாளர் ஜெகன், ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எட்வின் மைக்கேல்தாஸ், ஆசிரியர் ஆண்ட்ரூ, மத்திய சபை மன்ற தலைவர் ஜெயக்குமார், ஜெயராஜ் அன்னபாக்கியம் ஆஸ்பத்திரி மேலாளர் மெல்டன், கண்காணிப்பாளர் பால் ராபின்சன், வக்கீல் ரவீந்திரன் சார்லஸ், வடமேற்கு சபை மன்ற ஒருங்கிணைப்பாளர் வி.பி.வேதநாயகம், தொழிலதிபர் மெர்சி மேரி, டக்கரம்மாள்புரம் ஜெயராஜ் அன்னபாக்கியம் பள்ளி தாளாளர் தேவா காபிரியேல் ஜெபராஜன், உக்கிரன்கோட்டை பள்ளி தாளாளர் மோசஸ், பங்களா சுரண்டை பேரன்புரூக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் லாட்வின் நவமணி பிரேம்குமார், தலைமை ஆசிரியர் சவுந்தரராஜன் துரை, தொழிலதிபர் சாமுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story