மாவட்ட செய்திகள்

குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி சாவு + "||" + Worker dies after falling into pool

குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி சாவு

குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
சொக்கம்பட்டி அருகே குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.
அச்சன்புதூர்:
சொக்கம்பட்டி அருகே உள்ள கீழதிருவேட்டநல்லூர் மாடசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்லச்சாமி (வயது 55). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. 
உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலையில் செம்புளி சமுத்திர கால்வாய் குளத்தில் செல்லச்சாமி பிணமாக கிடந்தார். 
இதுகுறித்து தகவல் அறிந்த ெசாக்கம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, ஆடு மேய்க்கும் போது குளத்தில் தவறி விழுந்து செல்லச்சாமி உயிரிழந்தது தெரியவந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. மோட்டார் சைக்கிள் மோதி நகை தொழிலாளி சாவு
கருங்கலில் மோட்டார் சைக்கிள் மோதியதில் நகை தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
2. ரிஷிவந்தியம் அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி சாவு
ரிஷிவந்தியம் அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி உயிாிழந்தாா்.
3. தனியார் நிதி நிறுவனம் முன்பு விஷம் குடித்த தொழிலாளி சாவு
வள்ளியூரில் தனியார் நிதி நிறுவனம் முன்பு விஷம் குடித்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
4. கட்டிட தொழிலாளி சாவு
மோட்டாரை இயக்க சென்ற கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
5. மின்னல் தாக்கி தொழிலாளி பலி
மின்னல் தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்.