வீடு தேடிச் சென்று பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி


வீடு தேடிச் சென்று பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 22 Nov 2021 1:22 AM IST (Updated: 22 Nov 2021 1:22 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி அருகே மேலகரத்தில் வீடு தேடிச் சென்று பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தென்காசி:
தென்காசி அருகில் உள்ள மேலகரத்தில் நேற்று காலையில் இருந்து வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு அவர்களது வீடுகளிலேயே தடுப்பூசி செலுத்தினர். இவ்வாறு நேற்று மாலை வரை மொத்தம் 167 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டன. மேலகரம் நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி பரமசிவன், சுகாதார மேற்பார்வையாளர் தங்கராஜ், அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சரவணன் மற்றும் நகர பஞ்சாயத்து பணியாளர்கள் இதற்கான பணியில் ஈடுபட்டனர். 

Next Story