நூலக வார விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
நூலக வார விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை, கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. வழங்கினார்.
செங்கோட்டை:
செங்கோட்டை அரசு நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில், நூலக வார விழா கடந்த ஒரு வாரம் நடந்தது. இதில் மாணவ-மாணவிகளுக்கு சதுரங்கம், பேச்சு, கட்டுரை, ஓவியம், திருக்குறள் எழுதுதல், கவிதை, நூல் திறனாய்வு போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.
பசியில்லா தமிழகம் அமைப்பு நிறுவனர் முகமது அலி ஜின்னாவுக்கு சிறந்த சமூக சேவகர் விருதும், இலவச ஓவிய பயிற்சி வழங்கும் முருகையாவுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.
வாசகர் வட்ட செயலாளர் செண்பக குற்றாலம் பொருளாளர் தண்டமிழ் தாசன் சுதாகர், எஸ்.எஸ்.ஏ. திட்ட மேற்பார்வையாளர் ராஜேந்திரன், நூலகர் ஏஞ்சலின் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நூலகர் ராமசாமி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story