இலவச மருத்துவ முகாம்
பாவூர்ச்த்திரம் அருகே இலவச மருத்துவ முகாம் நடந்தது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே புல்லுக்காட்டுவலசையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்ட தொடக்க விழாவும், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச பொது மருத்துவ முகாமும் நடைபெற்றது.
இதில் கீழப்பாவூர் யூனியன் தலைவி காவேரி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜகுமார், அரியப்பபுரம் அரசு டாக்டர் தேவி கற்பூர நாயகி, சித்த மருத்துவர் தமிழ் முதல்வி, குணராமநல்லூர் பஞ்சாயத்து தலைவி சுபா சக்தி, கீழப்பாவூர் யூனியன் ஆணையாளர்கள் முருகையா, சண்முகசுந்தரம், பஞ்சாயத்து துணைத்தலைவர் திருப்பதி ராமர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா மற்றும் மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர். முகாமில் 600-க்கும் மேற்பட்டோர் மருத்துவ பரிசோதனை செய்து பயனடைந்தனர்.
Related Tags :
Next Story