தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
குளம் தூர்வாரப்படுமா
மிடாலம் பஞ்சாயத்துக்குட்பட்ட பறம்புவிளை பகுதியில் பறம்புகுளம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த குளத்தை தூர்வாரி பராமரிக்காததால் பாசி படர்ந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. எனவே, குளத்தை தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
-லால், பறம்புவிளை.
சேதமடைந்த சாலை
இடைக்கோடு டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட இடுக்கச்சிவிளையில் இருந்து பிலாவிளை செல்லும் சாலை ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
-சசிகலா, அண்டுகோடு.
சுகாதார சீர்கேடு
அழகியமண்டபத்தில் இருந்து திங்கள்சந்தை செல்லும் சாலையில் திருவள்ளுவர் காலனி உள்ளது. இந்த பகுதியில் சிலர் குப்பைகள், இறைச்சி கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, அந்த பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றுவதுடன், அங்கு குப்பைகளை கொட்டுபவர்கள் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவி, திருவள்ளுவர்நகர்.
சாலையை சீரமைக்க வேண்டும்
சுவாமியார்மடத்தில் இருந்து வேர்கிளம்பி செல்லும் சாலையில் பருத்தி வாய்க்கால் பாலம் உள்ளது. இந்த பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெஸ்பின், சிராயன்குழி.
சேதமடைந்த மின்கம்பம்
ஆரல்வாய்மொழியில் இருந்து செண்பகராமன்புதூர் செல்லும் மெயின்ரோடு உள்ளது. இந்த ரோட்டில் மின்கம்பம் ஒன்று சேதமடைந்து முறிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இந்த பகுதியில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். எனவே, மின்கம்பம் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் முன் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வகுமரன்,
ஆரல்வாய்மொழி.
Related Tags :
Next Story