கைதிக்கு கஞ்சா சப்ளை செய்த 2 பேர் கைது


கைதிக்கு கஞ்சா சப்ளை செய்த 2 பேர் கைது
x

பிஸ்கெட் பாக்கெட்டுக்குள் மறைத்து வைத்து கைதிக்கு கஞ்சா சப்ளை செய்த 2 பேர் சிக்கினர்.

புதுச்சேரி, நவ.22-
புதுவை காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர். இந்தநிலையில் வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அஜித் என்பரை அரியாங்குப்பத்தை சேர்ந்த ஜெகதீஸ்வரன், அகிலன் ஆகியோர் சந்திக்க சென்றனர். 
அப்போது அஜித்துக்கு அவர்கள் கொடுத்த 2 பிஸ்கெட் பாக்கெட்டுளை சிறை வார்டன்கள் சோதனை செய்தனர். அப்போது பிஸ்கெட் பாக்கெட்டுகளில் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின்பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகதீஸ்வரன், அகிலன் ஆகியோரை கைது செய்தனர்.

Next Story