என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை


என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
x

வில்லியனூர் அருகே ஆன்லைன் விளையாட்டால் மனஉளைச்சல் அடைந்த என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வில்லியனூர், நவ.22-
வில்லியனூர் அருகே ஆன்லைன் விளையாட்டால் மனஉளைச்சல் அடைந்த என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சிவில் என்ஜினீயர்
வில்லியனூரை அடுத்த மங்கலம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் தீபக் (22). சிவில் என்ஜினீயரிங் படித்து உள்ளார். இவர், கடந்த சில நாட்களாக தனது குடும்பத்தினரிடம் பேசாமல், கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டின் மாடியில் உள்ள தனது அறைக்கு சென்ற தீபக் நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சந்திரசேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் தீபக் அறைக்கு சென்று பார்த்தபோது, அவர் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆன்லைன் விளையாட்டால் வினை
இது தொடர்பாக மங்கலம் போலீசில் சந்திரசேகர் புகார் அளித்தார். அதன்பேரில்   சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் செல்போன் மற்றும் கம்ப்யூட்டரில் அதிக நேரம் ஆன்லைன் கேம் விளையாடியதும், அதன் விளைவாக கடுமையான மனஉளைச்சல் ஏற்பட்டு தீபக் தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் அறிவுரை
இந்த நிலையில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அதிகமாக செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் கேம் விளையாட அனுமதிக்க வேண்டாம். மேலும் பிள்ளைகளை தனிமையில் இருக்கவும் அனுமதிக்க வேண்டாம் என்று போலீசார் அறிவுரை கூறியுள்ளனர்.
___

Next Story