லாட்டரி சீட்டுகள் விற்ற 38 பேர் கைது


லாட்டரி சீட்டுகள் விற்ற 38 பேர் கைது
x
தினத்தந்தி 22 Nov 2021 2:45 AM IST (Updated: 22 Nov 2021 2:45 AM IST)
t-max-icont-min-icon

லாட்டரி சீட்டுகள் விற்ற 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி:
திருச்சி மாநகர போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து செல்லவும், லாட்டரி சீட்டுகள் விற்பனையை தடுக்கவும், மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் அறிவுறுத்தினார். அதன்படி கடந்த 1-ந்தேதி முதல் உறையூர் போலீஸ் நிலையத்தில் 7 பேர், கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையங்களில் 10 பேர், காந்தி மார்க்கெட், பாலக்கரை, தில்லைநகர் ஆகிய போலீஸ் நிலையங்களில் 16 பேர், கண்டோன்மெண்ட் மற்றும் எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையங்களில் 4 பேர், அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒருவர் என மொத்தம் 28 வழக்குகளில் 38 பேர் கடந்த 20 நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பணம், 7 செல்போன்கள், 3 இருசக்கர வாகனங்கள், ஒரு மூன்று சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கமிஷனர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.

Next Story