அகோரி திடீர் திருமணம்


அகோரி திடீர் திருமணம்
x
தினத்தந்தி 22 Nov 2021 2:46 AM IST (Updated: 22 Nov 2021 2:46 AM IST)
t-max-icont-min-icon

அகோரி திருமணம் செய்து கொண்டார்.

பொன்மலைப்பட்டி:
திருச்சி அரியமங்கலத்தில், காசியில் பயிற்சி பெற்ற அகோரி குருவான மணிகண்டன், ஜெய் அகோரகாளி சிலையைப் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வருகிறார். இவர் சமீபத்தில் விபத்தில் உயிரிழந்த சிஷ்யரின் உடல் மீது அமர்ந்து ஆத்மசாந்தி பூஜை நடத்தியுள்ளார். ஏற்கனவே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயின் சடலத்தின் மீது அமர்ந்து ஆத்மசாந்தி பூஜை செய்தவர் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் கொல்கத்தாவைச் சேர்ந்த பிரியங்கா என்ற பெண் அகோரி எட்டு வருடங்களாக அகோரி பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில், சிஷ்யையான அவருக்கும் அகோரி குருவான மணிகண்டனுக்கும் நேற்று அதிகாலையில் திருமணம் நடைபெற்றது. இதில் அகோரிகள் மணிகண்டனும், பிரியங்காவும் தங்கள் உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு அகோரி கோலத்தில் திருமணம் செய்து கொண்டனர். முன்னதாக சிறப்பு யாகம் நடைபெற்றது. யாகத்தின்போது சக அகோரிகள் தம்புரா, மேளம் அடித்து சங்கொலி எழுப்பி ஹர ஹர மகாதேவா என்று முழங்கினர். இந்த திருமணத்தை அகோரி மணிகண்டனின் குருவான சித்தர் வழி மதுரை பால்சாமி என்பவர் நடத்தி வைத்தார். திருமணம் முடிந்த பிறகு மீண்டும் யாகம் நடத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

Next Story