தடுப்பூசி முகாமிற்குள் புகுந்து மருந்துகளை சூறையாடிய கும்பல்
நித்திரவிளை அருகே தடுப்பூசி முகாமுக்குள் புகுந்து மருந்துகளை சூறையாடிய கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொல்லங்கோடு:
நித்திரவிளை அருகே தடுப்பூசி முகாமுக்குள் புகுந்து மருந்துகளை சூறையாடிய கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தடுப்பூசி முகாம்
நித்திரவிளை அருகே ஏழுதேசபற்று அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில், அந்த பகுதியை சேர்ந்தஏராளமானோர் தடுப்பூசி போட சென்றனர்.
அப்போது முகாமில் தடுப்பூசி செலுத்த வருபவர்களை ஒருவர் புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், அந்த நபருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சூறையாடியது
அப்போது திடீரென ஒரு கும்பல் பள்ளிக்குள் புகுந்து அங்கிருந்த தடுப்பூசி மருந்துகளை அடித்து உடைத்து சூறையாடி விட்டு தப்பிச் சென்றது. இதுபற்றி தகவல் அறிந்த நித்திரவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதற்குள் கும்பலும், புகைப்படம் எடுத்த நபரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொரோனா தடுப்பூசி முகாமில் மர்ம கும்பல் ஊசி மருந்துகளை சூறையாடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story