ஒரு பெண்ணுக்கு 2 பேர் போட்டா போட்டி: லாரி டிரைவர் கொலையில் சிறுவன் அதிரடி கைது
ஒரு பெண்ணுக்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய தகராறில் லாரி டிரைவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 17 வயது சிறுவன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
மேட்டூர்:
ஒரு பெண்ணுக்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய தகராறில் லாரி டிரைவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 17 வயது சிறுவன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
லாரி டிரைவர் கொலை
மேட்டூரை அடுத்த காவேரி கிராஸ் கால்வாய் கரை பகுதியில் கடந்த 17-ந் தேதி லாரி டிரைவர் செல்லவேலு வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த மேட்டூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், செல்லவேலு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
சிறுவன் கைது
இதற்கிடையே காவேரி கிராஸ் குண்டு கல்லூரி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனை போலீசார் கொலை செய்தனர். அந்த சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-
லாரி டிரைவர் செல்ல வேலுவுக்கும், அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. அந்தபெண், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடனும் ரகசிய தொடர்பு வைத்துள்ளார். சிறுவனும், லாரி டிரைவரின் கள்ளக்காதலியும் தனிமையில் இருந்ததை செல்லவேலு பார்த்துள்ளார். அதன் பிறகு அந்த பெண்ணை சொந்தம் கொண்டாடுவதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
வெட்டிக்கொலை
இதைத்தொடர்ந்து தன்னை செல்லவேலு கொலை செய்து விடுவார் என அந்த சிறுவன் பயந்து இருந்தார். இதனால் செல்லவேலுவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.
அதன்படி அங்குள்ள காட்டுப்பகுதியில் நின்ற செல்லவேலுவை, அரிவாளால் வெட்டி கொலை செய்தேன். தப்பி செல்ல நினைத்த என்னை போலீசார் கைது செய்து விட்டனர் என்று போலீசாரிடம் அந்த சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஒரு பெண்ணுக்கு 2 பேர் போட்டா போட்டி போட்டதில் லாரி டிரைவர் கொலை செய்யப்பட்டதும், 17 வயது சிறுவன் அதிரடியாக கைது செய்யப்பட்டதும் மேட்டூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story