ஆந்திராவில் கனமழை:சேலம் வழியாக செல்லும் 9 ரெயில்கள் ரத்து
ஆந்திராவில் கனமழை எதிரொலியாக சேலம் வழியாக செல்லும் 9 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
சூரமங்கலம்:
ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கன மழையின் காரணமாக சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், ஈரோடு, கோவை வழியாக செல்லும் 9 ரெயில்களை ரெயில்வே நிர்வாகம் நேற்று ரத்து செய்துள்ளது. அதாவது, திருநெல்வேலி -பிலாஸ்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (22620), எர்ணாகுளம்- டாட்டா நகர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (18190), ஆலப்புழா- தன்பாத் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (13352), கொச்சுவேலி- கோரக்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (12512), திருவனந்தபுரம்- செகந்திராபாத் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (17229), டாட்டா நகர்-எர்ணாகுளம் வாராந்திர ரெயில் (18189), கோவை -சில்சார் வாராந்திர சிறப்பு ரெயில் (12515), திருவனந்தபுரம் -புதுடெல்லி கேரளா தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (12625), செகந்திராபாத்- திருவனந்தபுரம் -சபரி எக்ஸ்பிரஸ் ரெயில் (17230) ஆகிய 9 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த தகவலை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story