போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி இளம் வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும் சிறப்பு பார்வையாளர் அறிவுரை


போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி இளம் வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும் சிறப்பு பார்வையாளர் அறிவுரை
x
தினத்தந்தி 22 Nov 2021 12:40 PM IST (Updated: 22 Nov 2021 12:40 PM IST)
t-max-icont-min-icon

போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி புதிய இளம் வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று சிறப்பு பார்வையாளர் ஷோபனா கூறினார்.

கிருஷ்ணகிரி:
போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி புதிய இளம் வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று சிறப்பு பார்வையாளர் ஷோபனா கூறினார்.
ஆய்வு கூட்டம் 
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை திருத்தப்பணிகள் முன்னேற்றம் தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனரும், வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு பார்வையாளருமான ஷோபனா கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார். 
அப்போது அவர் பேசியதாவது:-
1.1.2022 தேதியை மைய நாளாக கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்து கொள்ளும் வகையில் இந்த மாதம் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் நடைபெற்று வருகிறது. வருகிற 27 மற்றும் 28-ந் தேதிகளில் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இளம் வாக்காளர்கள் 
இந்த சிறப்பு முகாமில் பெயர் சேர்க்கவும், பிழைகள், திருத்தம், வேறு தொகுதிக்கு அல்லது ஒரே தொகுதிக்குள் முகவரி விட்டு, முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் அதற்கான உரிய படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து முகாமிலோ, வாக்குச்சாவடி முகவர்களிடமோ வழங்கலாம். இந்த சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பாக பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி புதிய வாக்காளர்களையும், இளம் வாக்காளர்களையும் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகன், உதவி கலெக்டர்கள் சதீஸ்குமார், தேன்மொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story