ஓட்டப்பிடாரம் அருகே புகையிலை விற்ற கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்
ஓட்டப்பிடாரம் அருகே புகையிலை விற்ற கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையில் போலீசார் குறுக்குச்சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாலசமுத்திரம் பகுதியில் குறுக்குச்சாலை பகுதியை சேர்ந்த தங்கையா மகன் முனியதுரை (வயது 53) என்பவரது பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அந்த கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், கடையில் 600 தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருப்பதை கண்டுபிடித்தனர். அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியதுரையை கைது செய்தனர்.
Related Tags :
Next Story